சுர்முகி ராமன் | |
---|---|
சுர்முகி ராமன் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுசித்ரா ராமன் |
பிறப்பு | 15 செப்டம்பர் 1983 (1983-09-15) (அகவை 41) கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1997 முதல் தற்போது வரை |
சுர்முகி ராமன் என அழைக்கப்படும் சுசித்ரா ராமன் (Surmukhi Raman) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.[1] 1983 செப்டம்பர் 15 இல் தமிழ்நாட்டின்கோயம்புத்தூரில் பிறந்தவர்.
மகாராஷ்டிராபுனேயில் வளர்ந்தார். இவர் எப்போதாவது பாடல்களை எழுதுகிறார். இவர் தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகர்களில் ஒருவராக உள்ளார். தமிழ் , தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.[2][3] மேலும் பல பக்திப் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.
அவர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.[4][5]
சுர்முகி ராமன் தனது ஆரம்பக் கல்வியினை மகாராஷ்டிர மாநிலம், புனேயில் , உள்ள வியாசர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் உயர்கல்வியினை, தமிழ்நாடு, சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார்.
அவரது தந்தை எஸ்.வி.ரமணன், மத்தியபிரதேசத்தின்இந்தோர் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பாடகராக இருந்தார். இசையமைப்பாளர்களான கலோனியல் கஸின்ஸ் அறிவுறுத்தலின்படி, பிறப்புப்பெயரான சுசித்ரா ராமனை, மோதி விளையாடு திரைப்படத்திற்கு பிறகு சுர்முகி ராமன் என தன் மகளுக்கு மறுபெயரிட்டார். புகழ்பெற்ற கஸல் கிங் ஹரிஹரன் இவருக்கு இந்த பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
சுர்முகி என்பதின் பொருள் முகம் என்பதாகும்.[6][7]
2007 ஆம் ஆண்டில் தொடங்கிய சுர்முகியின் பின்னணிப் பாடகர் வாழ்க்கை இரண்டு தசாப்தங்களாக நீண்டது.[8] தன் 14வது வயதில் மெல்லிசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர், மேஸ்ட்ரோ உட்பட திரையுலகில் அனைத்து முன்னணி இசை இயக்குனர்களான இளையராஜா, ஏ.
ஆர். ரகுமான், ஹரிஹரன், பரத்வாஜ்,[9]வித்யாசாகர் , சரத், விஜய் ஆண்டனி , தேவா , ஸ்ரீகாந்த் தேவா , டி இமான் , கலோனியல் கஸின்ஸ் , ஜீவராஜா, விஜய்சங்கர், தாஜ் நூர் , சேவியர், மணிகண்டன் கத்ரி , ரஜினி, யுவன் ஷங்கர் ராஜா , கணேஷ் ராகவேந்திரா , நல்லதம்பி மற்றும் ஷியாம் பாலகிருஷ்ணன் இசையமைத்த பாடல்களைப் பாடியிருக்கிறார் [10][11] இவரது பிரபலமான பாடல்களில் "போதும் ஒத்த சொல்லு",[12] "சின்னப் பய வயசு",[13] மற்றும் "பரருவாய" போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.[14] தமிழ்த் திரைப்படமான "தர்மதுரை" யில் இவர் பாடிய "ஆண்டிபட்டி கனவா காத்து" என்கிற பிரபலமான பாடல் "யூ டியூபில்" 26 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.[15] மேலும் அரண்மனை திரைப்படத்தில் இருந்து "பீச்சே பீச்சே" என்கிற இவரது மற்றொரு பாடல் அக்டோபர் 2016இல், "எமிரேட்ஸ் என்டெர்டெயின்மென்ட் பத்திரிகையின் தமிழ் பிரிவில் "சிறந்த கலைஞர்களின் மிகவும் பிரபலமான தமிழ் பாடல்களில்" ஒன்று என இடம்பெற்றது .[16]